***போராட்டம்****
#############
சிங்கங்கள் அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தன.
ஏதோ ஒரு சலசலப்பு .
சிங்கக் கூட்டத்திலிருந்து,ராஜா சிங்கம் சற்று தள்ளி நின்று எட்டிப் பார்த்தது
தூரத்தில் ஏதோ கூட்டம்.
தன் உதவியாளரை அழைத்து,அது என்னவென்று பார்த்து வரச் சொன்னது.
கம்பீராய் நடந்தது.
வேகமாகத் திரும்பி வந்தது.
" ராஜா ,,,நம்ம முயல்வெளிலதான் பிரச்சனை...யாரோ மனுசங்களாம் ...அந்தப் பகுதியை சுத்தம் செய்து ஏதோ செய்றாங்களாம்...போக மாட்டேன்னு அடம் பிடிக்குதுங்க முயல் கூட்டம்..."
அப்போது கூட்டமாக ஏதோ சலசலப்பு..
சிங்கங்கள் எட்டிப் பார்த்தன.
முயல்கள் கூட்டமாக வந்து கொண்டிருந்தன...
"அண்ணே...அண்ணே...ஒரு உதவி வேணும்...காலங்காலமா இந்தக் காட்டிலதான் இருக்கோம்...இப்ப விரட்டறாங்க...நாங்க இதை எதிர்த்துப் போராடப் போறோம்...நாங்க போராடும் போது நீங்களும் ஆதரவு தரணும்..."
வாய் விட்டு சிரித்தது சிங்கம்.
காடே அதிர்ந்தது.
"உங்களுக்கொரு ஆபத்துன்னா...நீங்கதான் பார்த்துக்கணும்...போங்க,...போங்க...எனக்கு நிறைய வேலை இருக்கு..."
சிங்கங்கள் அடித்து விரட்ட சோர்வாக திரும்பின முயல்கள்
"நம்ப யானை அண்ணன்கிட்டே உதவி கேட்போம் ...கண்டிப்பா செய்வாரு... "
முயல்களில் ஒன்று ஆலோசனை கூறியது
எல்லாரும் யானைக்கூட்டத்தை அடைந்தனர்
" ஏது ,,,இவ்வளவு தூரம்,அதுவும் கூட்டமா வந்திருக்கீங்க..."
யானை அண்ணன் விசாரித்தார்.
வந்த விபரத்தை விபரமாகக் கூறியது முயல் ராஜா
சற்று நேரம் யானை யோசித்தது.
"முயல் தம்பி உங்களுக்கு உதவணும்னு தோணுது...அதுல சின்ன சிக்கல் இருக்கு...இந்த அதிகாரம் புடிச்ச மனுசங்கள எதிர்த்தா எங்களுக்கும் ஆபத்துதான்...இது உங்க பிரச்சனை...நீங்களே பாத்துக்கங்க..."
யானையிடமும் தோல்வியே கிடைக்க இனி என்ன செய்வதென்று குழப்பமாக இருந்தது.
"நம்ம பிரச்சனை...நாமே பார்த்துக்கலாம்...போராடத் துணிச்சல் இருக்கும் வரை போராடுவோம்..."
கூட்டத்தில் ஒரு முயல் கம்பீரமாக முழங்கியது.
அப்போது எதிரில் நரி வந்து கொண்டிருந்தது.
"முயலுகளே...என்ன மாநாடு கீநாடு போடப்போறீங்களா...கூட்டமாக வர்றீங்க..."
முயல்கள் எதுவும் பேசாமல் நகர்ந்தன.
"என்னை நம்ப மாட்டீங்கன்னு தெரியும்...காலங்காலமா எங்களை சூழ்ச்சிகாரங்கன்னே முடிவு செய்துட்டாங்க...நான் உங்களுக்கு உதவ முடியும்...நம்புங்க..."
"இழக்கிறவங்களுக்கு யாரை நம்பறதுன்னு குழப்பம் வரும்...நீ என்ன உதவி செய்வே,,,,"
" நாட்டிலதான் மனுசங்க வித்தியாசமா நடந்துக்கிறாங்க...விவசாயிக்கு பிரச்சனை வந்தா அவன்தான் போராடனும்...வாத்தியாருக்கு ஒரு பிரச்சனைன்னா வாத்தியார்தான் போராடனும்...நாம அப்படி வேண்டாம்...இது முயலோட பிரச்சனை இல்லே ...காட்டோட பிரச்சனை...மற்ற விலங்குகளுக்கு எடுத்துச் சொல்வோம்...வாங்க தைரியமா நிற்கலாம்..."
நரியின் வேகத்தோடு முயல்கள் பின் தொடர்ந்தன.
#####******######*******#####***
Monday, 8 February 2016
சிறுவர் கதை
Subscribe to:
Post Comments (Atom)
இப்படி நல்லவர் போல் பேசி நயவஞ்சகமாய் அழைத்துச் செல்வது தானே 'நரி' குணம்?
ReplyDeleteநாட்டில் எல்லாம் மாறிப்போக நரிகளும் குணமும் மாறிப்போனதோ?
சிங்கங்கள் உலவிக் கொண்டிருந்ததாக கதைத்துவக்கம்.இத்தனை நாளும் ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்ததாகவே கதைகள் துவங்கியதைக் கண்டிருந்ததால் ஆச்சர்யத்தோடே ஆரம்பமாயிற்று வாசிப்பு.ஆச்சரியத்தோடே முடிந்தது சிறப்பு!
-தங்கத்துரையரசி
இப்படி நல்லவர் போல் பேசி நயவஞ்சகமாய் அழைத்துச் செல்வது தானே 'நரி' குணம்?
ReplyDeleteநாட்டில் எல்லாம் மாறிப்போக நரிகளும் குணமும் மாறிப்போனதோ?
சிங்கங்கள் உலவிக் கொண்டிருந்ததாக கதைத்துவக்கம்.இத்தனை நாளும் ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்ததாகவே கதைகள் துவங்கியதைக் கண்டிருந்ததால் ஆச்சர்யத்தோடே ஆரம்பமாயிற்று வாசிப்பு.ஆச்சரியத்தோடே முடிந்தது சிறப்பு!
-தங்கத்துரையரசி