Sunday, 7 February 2016

சிறுவர் கதை

        அலைகள் அலைந்து கொண்டிருக்கும் குளம்.மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருந்தன குஞ்சு மீன்கள் .                        
       "அக்கா  ...அக்கா ...அம்மா எங்கேயோ போயிட்டாங்க...அம்மா வரதுக்குள்ள நாம கரையோரம் போயிட்டு வரலாம்..."
            தன் அக்காவிடம் கொஞ்லாக கேட்டது தங்கை மீன்.
         "வேண்டாம்பா...அம்மா வந்த பிறகு எங்க வேணுனாலும் போகலாம்..தனியா எங்கேயும் போக வேண்டாம்.."
         "நீ  எப்பவும் இப்படித்தான்...நான் கரைக்குப் போய் வேடிக்கை பார்த்துட்டு வரேன் "
         அக்காவின் பேச்சை புறம் தள்ளி விட்டு துள்ளிக் கொண்டு ஓடியது.
       கரையோரமாக இருந்த பலா மரங்கள்,தென்னை மரங்கள் ஆகியவற்றை எட்டி எட்டிப் பார்த்து ரசிப்பதும்  தண்ணீருக்குள் மூழ்குவதுமாக இருந்தது.
        தென்னை மரத்தில் ஓடி விளையாடுகிற அணிலைத்தான் ரொம்பப் பிடிக்கும்.கரைக்குச் சென்று அணிலோடு விளையாடலாம் .ஆனால் அம்மா சொல்லி இருக்கிறாள்.கரைக்குப் போனால் உயிர் போய்விடும்
            தண்ணீருக்குள் நிலா மிதந்து கொண்டிருந்தது.
        அதன் மீது எட்டிக் குதித்து எட்டிக் குதித்து விளையாடியது
      "அடடா   சூப்பர்...என்ன டைவ்...பார்க்கவே ஆச்சரியமா இருக்கு..."
      சுற்றும் முற்றும் பார்த்தது.யாரையும் காணவில்லை.
     "நான்தான் பாராட்டினேன் ..."
          குரல் வந்த திசையைப் பார்த்தது .புதிய உருவம் ஒன்று நின்றிருந்தது.
      அட   நம்மை விட பெரிசா இருக்கே...ஆச்சரியமாக இருந்தது.
       "நான் பக்கத்து குளத்திலிருந்து வரேன்   ...நீ ரொம்ப அழகா இருக்கே..."
         அந்த உருவத்தின் புகழ்ச்சி  புல்லரித்தது.
      "நாளைக்கும் வருவியா .."
  உருவம் கேட்டது
     வருவேன் என்று பதில் சொன்னது
      அன்று அம்மாவிடம் இதைச் சொல்லாமல் மறைத்து விட்டது
      இரண்டு,மூன்று நாட்களாக பழகியதில் நண்பர்களாகி விட்டார்கள்.
      "நீ  நாளைக்கு உங்க அம்மா  அப்பா அக்கா தங்கை எல்லாரையும் அழைத்துக் கொண்டு வா  ...எல்லாரும் சந்திப்போம் என்றது  உருவம்.தானும் பெற்றோரை அழைத்து வருவதாக கூறியது.
      அன்று தான் கரையில் சந்தித்த உருவத்தைப் பற்றி அம்மாவிடம் கூறியது.
      "வேண்டாம்...நமது இடத்திலேயே இருப்போம்.." மறுத்தது
      "நம்மை யாராவது புகழ்ந்தா அது தகுதியானதாக இருக்கணும்  ...நீ சொல்வதைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை...யாரோ நம்மைப்  பிடிக்க சதி செய்கிறார்கள்..."
அம்மா மீன் தெளிவாகச் சொன்னது
       குஞ்சு மீனுக்கு கோபம் வந்து விட்டது.வருவதாக வாக்கு  கொடுத்து விட்டேன்...கண்டிப்பாக போகனும்.,'
         பிடிவாதம் வென்றது.கரையை நோக்கி போனார்கள்.
      "அம்மா...அதோ பாருங்கள்  ...அவர்கள்தான் நண்பனின் உறவினர்கள்  ...கூட நின்றிருப்பதுதான் என் நண்பன் என்றது.
       மனம் திக்கென்றது...குழந்தாய்..கொஞ்சம் நில்லுங்க  ...இவர்கள் நம் எதிரிகள்  ...நம்மை ஒட்டு மொத்தமாக சாப்பிடவே இப்படி சதி செய்திருக்கிறார்கள்...இவர்கள்தான் கொக்குகள் ...புகழுக்கு மயங்கி எங்களையும் ஆபத்தில் சிக்க வைத்து விட்டாய்..இந்த அம்மா சொல்வதில் நம்பிக்கை இருந்தால் வீடு திரும்புங்கள்.,,,புகழ் வேண்டுமானால் கரைக்குப் போகலாம்.ஆனால் யாரும் உயிரோடு திரும்ப மாட்டோம்..தகுதி உள்ளவர்கள் புகழ்ந்தால்தான்
பெருமை.புகழ்ந்து பேசினால்  மட்டும் நண்பர்களாக முடியாது.
         இனி நீங்கள் முடிவெடுங்கள்.நான் காத்திருக்கிறேன்.########******
###########################
    

2 comments:

  1. கதையும் அதைச் சொல்லிய பாங்கும் அருமை!முடிவை கதை கேட்கும் மீன்குஞ்சுகஸ்ரீடமே விட்டது நல்ல உத்தி!
    -தங்கத்துரையரசி

    ReplyDelete
  2. கதையும் அதைச் சொல்லிய பாங்கும் அருமை!முடிவை கதை கேட்கும் மீன்குஞ்சுகஸ்ரீடமே விட்டது நல்ல உத்தி!
    -தங்கத்துரையரசி

    ReplyDelete