*******சிறுவர் கதை ****
*****************சொல்பேச்சு*****
காலையில் கண் விழித்துக் கொண்ட புறாக்கூட்டம் தங்களுக்கான இரையைத் தேடிப் புறப்பட்டன.
வழக்கமான பாதையில் பறந்து கொண்டிருந்தன.
"அம்மா ...இவ்வளவு தூரம் வந்து விட்டோம்...ஒரு பிடி உணவைக் காணவில்லையே..."
குஞ்சுப் பறவை கவலையோடு கேட்டது .பசி மயக்கம் கண்ணிலும்,குரலிலும் தவிப்பாய் இருந்தது.
"ஆம் குழந்தையே...கடந்த சில நாட்களாகவே இப்படித்தான் நடக்கிறது...புழுக்கள் இல்லாத மண் வயல்கள்..வெறும் கட்டடங்கள்.,.இவைகள்தான் உள்ளன...என்ன செய்வது தேடலைத் துவங்குவோம்..."
தாய்ப்பறவை ஆறுதல் கூறியது.தனக்கும் பசிதான் என்று வெளிப்படையாக கூற முடியவில்லை...
இப்போதெல்லாம் இரையே கிடைப்பதில்லை.
தன் பறத்தலை இன்னும் கூடுதலாக வேகப்படுத்தியது.
ஒவ்வொரு வாசலாக தன் பார்வையைச் செலுத்தியது.
பிறகு வயல்வெளிகள் தென்படுகின்றதா என்று பார்த்தபடி பறந்து கொண்டிருந்தது.ஏமாற்றம்தான் மிஞ்சியது
" அம்மா...அம்மா.,"
ஆர்வத்தோடு தன்னை அழைத்த குஞ்சுப் பறவையைப் பார்த்தது.
"அதோ பாருங்கள் ஒரு வீட்டு வாசலில் தானியங்கள் தெரிகின்றன.நாம் அதைச் சாப்பிட்டுப் பசியாறலாம்...இறங்கலாம் அம்மா "
"நானும் பார்த்தேன் ...அருகில் எங்காவது வயல்வெளி இருக்கும் ..அங்கேயே தேடலாம்..'
"இல்லை..அம்மா...இப்போது மிகவும் பசியாக இருக்கிறது.கிடைப்பதை விட முடியுமா..நான் இறங்குகிறேன் "
"இங்கு இப்படி ஒருவன் நமக்காக காத்திருப்பதில்லை...எனக்கு சந்தேகமாக உள்ளது...பொறுப்போம்"
தாய்ப்பறவையின் சொல்லைக் கேட்கத் தயாராக இல்லை.தரையில் இறங்கியது.
வாசலில் பரவலாகக் கிடந்த தானியங்களைக் சுவைக்கத் துவங்கியது.
" இல்லை குழந்தை ஆபத்து காத்திருக்கிறது..உடனே மேலே வா என்று எச்சரித்தது
பசி அறிவை மறைத்தது
சட்டென்று தன்னை வளைத்த வலையில் சிக்கிக் கொண்டது
வலியில் கதறியது
"கவலைப்படாதே ...உன்னை வளர்ப்பதற்காகத்தான் பிடித்துள்ளேன். தினமும் உனக்கு தேவையான யாவும் தருவேன்..."
வீட்டுக்காரனின் பேச்சில் சமாதானமாகி விட்டது குஞ்சுப்பறவை
இப்படித்தான் காலங்காலமாக இந்த மனிதர்கள் பிறர் பசியைப் பயன்படுத்தி தனக்கான அடிமைகளைத் தேர்வு செய்கிறார்கள்
தனக்குத் தானே புலம்பத் துவங்கியது தாய்ப்பறவை
Friday, 5 February 2016
சிறுவர் கதை
Subscribe to:
Post Comments (Atom)
சிந்திக்க வைக்கும் நல்ல கதை.
ReplyDeleteசிறப்பான சிறுவரி கதை!
ReplyDeleteபெற்றமனம் பித்தாகி இருக்கும் தாய்ப்பறவைக்கு:
குஞ்சோ வேண்டியது கிடைத்தால் போதுமென்று மனதைக் கல்லாக்கிக்கொண்டு விட்டதே!
-தங்கத்துரையரசி
சிறப்பான சிறுவரி கதை!
ReplyDeleteபெற்றமனம் பித்தாகி இருக்கும் தாய்ப்பறவைக்கு:
குஞ்சோ வேண்டியது கிடைத்தால் போதுமென்று மனதைக் கல்லாக்கிக்கொண்டு விட்டதே!
-தங்கத்துரையரசி
பசி தான் அடிமைகளை உருவாக்குகிறது.....உண்மை தான்
ReplyDeleteபசி தான் அடிமைகளை உருவாக்குகிறது.....உண்மை தான்
ReplyDelete