பகலுக்கு நானொரு விளையாட்டுப் பொருள்
தூக்கி வீசி விளையாடுகிறது
உருட்டி உருட்டி விளையாடுகிறது
துரத்திப் பிடித்தும் விளையாடுகிறது
விளையாடி அலுத்து சின்னஞ்சிறு புழுவாக்கி
இரவுக்குத் தருகிறது
மிகு கருணை கொண்ட இரவோ
தன் அலகால் புரட்டிப் புரட்டி விளையாடுகிறது
எப்போதும் உயிர்த்திருக்கும்படியாய்
வரம் கொடுத்தது யாரென்று தெரியவில்லை
***
க.அம்சப்ரியா
No comments:
Post a Comment