தலைகீழாக சுற்றும் கடிகாரம்
*****
எப்போதும் கடிகாரத்தைத்
தலைகீழாக சுழற்றி விளையாடும்
ஒருவனையே கடிகாரத் துணைவனாக வைத்திருக்கிறான்
எப்போதும் முட்களை ஒடித்து
இடம் மாற்றி விளையாடுகிறவரையே
தன் நேரத்தைச் சரியாக்கும்
எஜமானனாக காலம் பரிசாக்குகிறது
அவனுக்கு
இருபத்தி நான்கு மணி கடிகாரத்திற்கு மேலும்
வேகமாக அதி வேகமாகச் சுழற்றி
தன்னை மெருகேற்றிக் கொண்டவனின்
சொற்களின் கீழ்
மெதுவாக ஓடுவதாக குற்றம் சாட்டப்பட்ட
வேகம் குறையா கடிகாரமொன்று
அவனாகவே இருக்கிறது
இறுதியாக
ஒரு சுய சமாதானத்தால்
முடுக்கிவிடப்பட்டு
ஓடத் தொடங்குகிறான்
கடிகாரங்களின் விரும்பி
மேலும் அதை மேலும் கீழும் தட்டி
தன் பசிக்கு இரையாக்குகிறான்
சுழலத் துவங்குகிறான் கடிகாரன்
ஓய்வே இல்லாத காலத்தைச் சுமந்தபடி
***
க.அம்சப்ரியா
No comments:
Post a Comment