இடைவிடாமல் குரைத்தபடி இருந்தது
எதைப் புரிய வைக்க முயல்கிறதென புரியவே இல்லை
தன் கழுத்துப்பட்டையை உற்றுப் பார்க்கிறது
பிறகது என்ன செய்வதென அறியாமல்
வானத்தை நோக்கி பாய முயற்சிக்கிறது
ஒவ்வொரு முறையும் எனை
தன் குரைப்பால் சீண்டும் அதற்கு
பசியாகத்தான் இருக்குமென
இல்லாத ரொட்டித் துண்டுகளை
பிய்த்து வீசுகிறேன்
வெட்டார வெளியைப் பார்த்து முறையிடுகிறேன்
தொடர்ந்தபடியே இருக்கிற இந்தக் குரலொலிக்கென
புரண்டு படுத்த இடைவெளியில்
கலைந்த கனவின் தொடர்ச்சியாய்
தொடங்கியது
மன நாயின் குரைப்பொலி
***
க.அம்சப்ரியா
No comments:
Post a Comment