" கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல..
முணுமுணுத்தபடியே உறக்கத்திலிருந்து விடுபடுகிறாள்
பொழுது முழுக்க தன்னிடமிருந்து பிரிந்திடாத வரிகளை
இசைத்தபடியே எல்லா வேலைகளையும்
செய்து முடிக்கிறாள்
மாலைப் பொழுதில் துணைக்கு வந்து சேர்கிறது
" காதலின் தீபமொன்று ஏற்றினாளே
என் நெஞ்சில்..."
பிறகு கண்ணீரற்ற தனக்கான பாடலொன்றை
தானே இசைக்கத் துவங்கினாள்
அதை யாரிடமும் சொல்வதில்லையென
சத்தியம் வாங்கிக் கொள்கிறாள் தன்னிடமே
***
க.அம்சப்ரியா
No comments:
Post a Comment