Friday, 10 August 2018
Thursday, 26 July 2018
கவிதை
மலைகளைப் பார்க்கத்தான் சென்றிருந்தேன்
காலிடறிய பாறைத் துணுக்குகள்
தங்களின் முன்பொரு. காலத்தை
அழுகையோடு கூறியது
ஏதோ விசும்பக் கேட்டுத் திரும்பினேன்
மலைகளின் அரணென இருந்த தங்களின்
நிலை குறித்து
வெட்டப் பட்ட மரங்களின்
மிச்சத் துண்டுகளின் கதையில்
தேம்பிக் கொண்டிருந்தன பறவைகளின் உயிர்
கண்ணீரைத் துடைத்துக் கரையேர
முன்பொரு முறை தாகம் தீர்த்த
நதியொன்றைத் தேடினேன்
குவித்த குப்பைகளில் மக்காத குவளையொன்று
கெக்கலித்தபடி இருந்தது
உறங்கப் போனேன்
எரிந்த பிணவாடையோடு
க.அம்சப்ரியா
Wednesday, 25 July 2018
Tuesday, 24 July 2018
Saturday, 21 July 2018
Thursday, 12 July 2018
Monday, 9 July 2018
அம்சப்ரியா கல்விச் சிந்தனைகள்
கல்விச் சிந்தனைகள்
* பழுக்க வைக்கும் தந்திரங்களைக் கொண்டிருப்பவர் ஆசிரியர் அல்ல. இயல்பாக பிஞ்சு, பூ,பூவாகி, காயாகி, காய் கனியாகி கனியும் வரை பக்குவமாக கவனித்துக் கொள்கிற தோட்டத்துக்கார்ரே ஆசிரியர்.
‡""""""""
*
அச்சடிக்கப் பட்டிருக்கிற எழுத்துகளைக் கற்றுக்கொடுப்பவர் மட்டுமே ஆசிரியர் அல்ல.எழுத்துகளாகவும், கருத்துகளாகவும் மாணவர் மனதில் நுழைபவரே ஆசிரியர்.
***** க.அம்சப்ரியா****
Saturday, 26 May 2018
கவிதை
அம்மாக்கள்
ஒரு கைப்பிடி தாய்மையைக் கலக்குகிறார்கள்
அத் தேநீர் பேரன்பை நாவுக்களிக்கிறது
தங்கைகளோ
ஒரு கைப்பிடி பாசத்தைக் கலக்குகிறார்கள்
அது ஏழேழு பிறவிக்கான தாய்மையை கையளிக்கிறது