Saturday, 3 August 2019

கவிதை

[6/6, 7:30 AM] amsapriya14: பொய் பத்து கவிதைகள்

***
பொய்யைத் தொடர்ந்து
பயணித்தபடி இருந்தான்
அது உண்மையூரின் தண்டனையில்
நிறைவுற்றது..

**
முதலில்
ஆரஞ்சு பழத்தைப் போல
பகுதி பகுதியாக
பொய்யை சுவைக்கத் தொடங்கினான்
பிறகு பொய்ப்பழமொன்றை
அவனே உருவாக்கினான்
பொய்யை சுவைப்பவர்கள் யாவரும்
அவனை சுவைக்கத் துவங்கினார்கள்
பொய்யின் சுவை
அவ்வளவு தித்திப்பென்றார்கள்

***
பொய்யை
எங்கிருந்தோ சிறு விதையென வாங்கி வந்தான்
கரிசனமாக ஊன்றி
பொய்யூற்றி வளர்த்தான்
அதுவோ  உண்மையை
பூத்துக் குலுங்கியது

***
ஒரு பொய்
ஒரே ஒரு பொய்
உண்மைகளெல்லாம்
கல்லறையில் இருக்கின்றன..
.
*""பொய்யின் இரத்தம்
உண்மையென
சுடர்கிறது..

***
[6/6, 7:31 AM] amsapriya14: பொய்யற்றவனின் வாழ்வில்
உண்மைகளெல்லாம்
பெரும் பட்டினியில்..

***
[6/6, 10:07 PM] amsapriya14: பொய்வானத்தில்
பொய்மழை பெய்கிறது
பொய்க்குடையுடன்
பொய்யனின பயணம்
**
இரவைத் தின்றதாக
பொய் சொல்கிறான் கவிஞன்
இரவோ கவிஞனைத் தின்கிறது...

***
[6/6, 10:10 PM] amsapriya14: இந்தப் பாதையில்தான்
பயணித்ததாக
கூறுகிறான்
அப்பொய்யன்
கேலி பேசும் நட்சத்திரங்கள்
இருளைப் பரிசளிக்கின்றன
பொய்யனுக்கு..

**"
[6/6, 10:13 PM] amsapriya14: வேரெல்லாம்
பொய்ப்பூக்கள்
கிளையெல்லாம் பொய்வேர்கள்
நிழலில் பசியோடு பொய்யொன்று

**"