மலைகளைப் பார்க்கத்தான் சென்றிருந்தேன்
காலிடறிய பாறைத் துணுக்குகள்
தங்களின் முன்பொரு. காலத்தை
அழுகையோடு கூறியது
ஏதோ விசும்பக் கேட்டுத் திரும்பினேன்
மலைகளின் அரணென இருந்த தங்களின்
நிலை குறித்து
வெட்டப் பட்ட மரங்களின்
மிச்சத் துண்டுகளின் கதையில்
தேம்பிக் கொண்டிருந்தன பறவைகளின் உயிர்
கண்ணீரைத் துடைத்துக் கரையேர
முன்பொரு முறை தாகம் தீர்த்த
நதியொன்றைத் தேடினேன்
குவித்த குப்பைகளில் மக்காத குவளையொன்று
கெக்கலித்தபடி இருந்தது
உறங்கப் போனேன்
எரிந்த பிணவாடையோடு
க.அம்சப்ரியா