Friday, 4 March 2016

இரண்டு கவிதைகள்

*******************************
போகிற போக்கில் இறக்கி வைக்கிறாய்
உன் பிரசவ வலியில்
தவித்த நிமிடங்களை-
எங்கோ ஒளிர வேண்டிய தீபம்
பொருந்தாத இடமொன்றில் மங்கிப்போனதை-
நள்ளிரவில் உன் உடல் எதிர்கொள்ளும்
வன்முறைகளை-
உன் தோட்டத்துப்பூக்கள்
வசீகரமற்றுப் போனதை-
யாவர்க்குமான செருப்பாக
உன் பாதங்கள் மாறிப்போனதை-
விடைபெறுகையில்
நம் காலம் ஒன்று
கதவிடுக்கில் எட்டிப் பார்த்ததை
இருவருமே கவனியாதது போல
கையத்துக் கொண்டோம்

*******************************************கோடுகளை அங்கொன்றும்
இங்கொன்றுமாக இழுப்பாய்
உயிர்த்திருக்கும் ஓவியம்
எதுகை மோனையோடு
வார்த்தைகள் கோர்ப்பாய்
செய்யுளைப் போல
கருத்தொன்றை தந்திருப்பாய்
ஆள் பற்றாத கொக்கோவில்
தற்காலிகமாக ஓடி
அந்த அணியின் பெருமையாகியிருப்பாய்
கமலபுவனியை திருமதி கமலபுவனி
இந்த நெடு வீதியொன்றில்தான்                                    அடித்து விரட்டினாள்
************************************

க அம்சப்ரியா